பதிவு செய்த நாள்
29
நவ
2021
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீபம் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, விடுமுறை நாளான நேற்று, கொட்டும் மழையிலும் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 19ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. கடந்த10 நாட்களாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்று, மஹா தீபத்தை தரிசனம் செய்தனர்.இன்று மஹா தீபம் நிறைவடைவதை ஒட்டி, நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில், கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.கிரிவலம் சென்று, கோவிலில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தவர்கள், மாலை, 6:00 மணிக்கு மஹா தீபத்தை தரிசித்து ஊர் கிளம்பினர்.