திருமலை ஏழுமலையான் கோவில் சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த டாலர் சேஷாத்ரியின் மறைவுக்கு, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:மக்கள், அதிகாரிகள், பிரமுகர்களுக்கு உதவிகள் செய்தும், மகான்கள், மடாதிபதிகள் ஆகியோருக்கு சேவைகள் புரிந்தும், மலையப்ப சுவாமிக்கு கைங்கர்யம் செய்து அனைவரது அன்பையும், ஆசியையும், அருளையும் பெற்றவர் சேஷாத்ரி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.