பதிவு செய்த நாள்
02
டிச
2021
03:12
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பட்டாபி ராமர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயில் தெருவில் உள்ள பட்டாபிராமர் கோயிலில் மஹா ஸம்ப்ரோக்ஷண விழா (கும்பாபிஷேகம்) நடந்தது. முதல் நாள் சுதர்சன ஹோமம், சாந்தி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. மாலை எஜமான சங்கல்பம், புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, ரக்ஷாபந்தனம், கலச ஸ்தாபனம், கலச ஆவாஹனம், வேதபாராயணம், திவ்யபிரபந்தம் நடந்தது. கலச பூஜை, உத்சவர் திருமஞ்சனம் நடந்தது. இன்று காலை 5:30 மணிக்கு, நான்காம் கால பூஜை, வேத பாராயணம், ஆராதனை, பூர்ணாகுதி, தீபாராதனை, கும்ப புறப்பாடு ஆகியவை நடந்தது. 9:30 மணிக்கு மேல் மகா சம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேகம் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் குமரதுரை கலந்து கொண்டனர். மாவட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள், இளங்கோவன், ஜவஹர், தேவி, தனலட்சுமி மற்றும் உதவி கோட்ட பொறியாளர் பரமசிவம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கோயில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கலந்து கொண்டனர். அன்ன தானம் நடந்தது.