பதிவு செய்த நாள்
02
டிச
2021
05:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரவலப்பாதையில் குபேர கிரிவலம் செல்ல தடைசெய்யப்பட்ட நிலையில் சில பக்தர்கள் குபேர லிங்ககோவில் நுழைவாயில் முன் நின்று சுவாமியை வழிப்பட்டனர்.
திருவண்ணாமலையில், 14 கி.மீ தொலைவுள்ள கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களையும் தரிசனம் செய்து, பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இதில், 7வது, லிங்கமாக உள்ள குபேரலிங்கத்தை வழிபட்டால், செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று, பிரதோஷ காலத்தில், குபேர பெருமான் கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை தரிசனம் செய்வதாகவும், அந்த நேரத்தில் கிரிவலம் சென்றால், குபேர பெருமானின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, குபேர கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் வந்தனர். கிரிவலம் செல்ல தடைசெய்யப்பட்ட நிலையில் சில பக்தர்கள் குபேர லிங்ககோவில் நுழைவாயில் முன் நின்று சுவாமியை வழிப்பட்டனர்.