திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு, திருவிளக்கு வழிபாடு நேற்று நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கிற்கு பூஜை நடத்தினர். திருவிளக்கு வழிபாட்டில், ஐயப்ப சுவாமியை , திருவிளக்கில் ஆவாஹணம் செய்து சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.