பதிவு செய்த நாள்
04
டிச
2021
03:12
தஞ்சாவூர்: அமாவாசையை முன்னிட்டு, கும்பகோணம் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 54 ஆயிரம் வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், காமராஜ் நகர் பகுதியில், ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, மாதந்தோறும் அமாவாசை நாளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெறும். அந்த வகையில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, 11 அடி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, 54 ஆயிரம் வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.