பதிவு செய்த நாள்
05
ஜூலை
2012
11:07
நாமக்கல்: கிளாப்பாளையம் ராக்கியண்ணன், பெரியண்ணன், தங்காயி ஸ்வாமி கோவிலில், வரும் 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. நாமக்கல் அடுத்த கிளாப்பாளையத்தில் ராக்கியண்ணன், பெரியண்ணன், சின்னண்ணன், தங்காயி ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகுந்த பொருட்செலவில் துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் 8ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்தனர். விழாவை முன்னிட்டு, 7ம் தேதி காலை 6 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், 7 மணிக்கு கணபதி பூஜை, புண்யாக வாசனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை நடக்கிறது. இரவு 11 மணிக்கு பிம்பசுத்தி, அஷ்டபந்தம் சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, காலை 7 மணிக்கு யாத்திரா தானம், 7.20 மணிக்கு விமான கலசாபிஷேகம், விநாயகர், பெரியண்ணன், சின்னண்ணன், தங்காயி ஸ்வாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, கோ பூஜை, சிறப்பு அலங்காரம், பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.