ஈரோடு: ஈரோடு நேதாஜி சாலை, கொங்காலம்மன் கோவிலில், நேற்று முன்தினம் பவுர்ணமியையொட்டி, இரவில் விளக்கு பூஜை நடந்தது. 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இக்கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று விளக்கு பூஜை நடப்பது வழக்கம். மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வர். பவுர்ணமியையொட்டி, நேற்று முன்தினம் இரவு கொங்காலம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, கொங்காலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விளக்கு பூஜையில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபாலன், ஆய்வாளர் ஜெயமணி, செயல் அலுவலர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.