வாடகை தராவிட்டால் வவ்வாலாக பிறப்பீர்கள்: மதுரை ஆதினம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2021 01:12
மானாமதுரை: கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள், வாடகை கொடுக்காதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ பிறக்க நேரிடும் என மதுரை ஆதினம் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் கூறினார். கோயில்களுக்குச் சென்று வழிபாடு . செய்தால் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்று மதுரை ஆதீனம் தஞ்சாக்கூரில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பேசினார் .
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் ஜெகதீஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு மதுரை ஆதீனம் பேசியதாவது: தமிழகத்தில் நமது முன்னோர்கள் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று தங்களது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருந்தனர். அதேபோல் தற்போது நாமும் தினந்தோறும் கோயில்களுக்குச் சென்று உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் . ஆனால் தற்போது பலர் தினந்தோறும் அலைபேசிக்கு தான் சார்ஜ் ஏற்றுகின்றனர். உடலுக்கு சார்ஜ் ஏற்ற கோயில்களுக்கு செல்வதில்லை . தற்போது டி.வி. , அலைபேசி மற்றும் மின்சார பொருள்களுக்கு கியாரண்டி உண்டு . அதேபோல் ஒரு வேட்டி சேலை வாங்கினால் கூடுதலாக இலவசமாக நான்கு வேட்டி சேலைகள் கூட கொடுக்கின்றனர் .ஆனால் இந்த மனித உடலுக்கு நிரந்தரம் என்று எதுவும் உள்ளதா . ஆகவே மனிதர்கள் இருக்கின்ற காலத்தில் நல்ல செயல்களை செய்ய வேண்டும். மனிதர்கள் தற்போது தங்களது உடலை அழகுபடுத்த அழகு நிலையங்களில் அதிக நேரம் ஒதுக்குகின்றனர்.ஆனால் இறை வழிபாட்டுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது . தமிழகத்தில் பண்பாடு , கலாச்சாரம் போன்றவை கிராமங்களில்தான் உள்ளது . கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் கடைகளை குத்தகைக்கு எடுத்து வாடகை கொடுக்காதவர்கள் அல்லது கோயிலுக்கு உண்டான கடனை செலுத்தாதவர்கள் உடனடியாக கொடுத்துவிடுங்கள் அப்படி இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் வவ்வாலாகவோ , பெருச்சாளியாகவோ , மூஞ்சூறுவாகவோ பிறக்க நேரிடும். அதைப்போல சிவன் சொத்து குலநாசம் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இவ்வாறு அவர் பேசினார்.