பதிவு செய்த நாள்
18
டிச
2021
12:12
கோவில்களில் மார்கழி மாத உற்சவம் துவங்கி நடைபெற்று வருகிறது. தனுர் மாதம் எனும் மார்கழி மாதம் முழுவதும் காரமடை அரங்கநாதசுவாமி கோயில் மற்றும் நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு கருட தீர்த்தம் தெப்பக்குளத்தில் இருந்து மேள வாத்தியம் முழங்க வெண்பட்டு கூடையுடன் அர்ச்சகர்கள் தீர்த்தத்தை எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
அதிகாலையில், பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழ் மாதங்களில், மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில், சிறப்பு பூஜைகள் வழிபாடு நடக்கும். அவ்வகையில், மார்கழி முதல் நாளில், சிவாலயங்களில் திருவெம்பாவை மற்றும் பெருமாள் கோவிலில், திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கோவில்களில், நேற்று அதிகாலை மார்கழி வழிபாடு நடந்தது.அவிநாசியில், சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்தவர்கள் நான்கு ரத வீதிகளில், சிவபுராணம், தேவாரம், திருவெம்பாவை பாராயணம் செய்தபடி ஊர்வலமாக சென்றனர். திருப்பூரில் குலால பிள்ளையார் கோவிலிலிருந்து சிவனடியார் ஊர்வலமாக சென்று விஸ்வேஸ்வரர் மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில், சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.