சபரிமலையில் நெய்யபிஷேகம், எருமேலி பாதையில் பக்தர்கள் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2021 09:12
சபரிமலை: சபரமலை பயணத்தில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மண்டல மகர விளக்கு சீசனில் கேரள அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தொடக்கத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் சுவாமி ஐயப்பன் ரோடு வழியாகச் சென்று அந்த ரோடு வழியாகவே திரும்பவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்கள் மத்தியில் விடுத்த கோரிக்கையை ஏற்று பம்பை குளியல், நீலிமலை பாதை திறப்பு, சன்னிதானத்தில தங்க அனுமதி போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் பல தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு கேரள தேவசம் அமைச்சர் அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி காலை 7:00 முதல் பகல் 12:00 மணி வரை பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்யலாம். எருமேலி பாதை வழியாக பக்தர்கள் பயணம் செய்யலாம். தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 60 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் தளர்வுகள் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.