பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
வெள்ளவேடு:பாதாள சுந்தர விநாயகர் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.திருவள்ளூர் அடுத்த, வெள்ளவேடு கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாதாள சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியர், அய்யப்பன், நவ கிரகங்கள், லட்சுமி நாராயண பெருமாள், வீர ஆஞ்சநேயர், இளங்காளி அம்மன், மாரியம்மன் ஆகிய சன்னிதிகள் உள்ளன.இந்த சன்னிதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி ஹோமம், நவகிரக ÷ஷாமம் நடந்தது. நேற்று காலை, கிராம தேவதை அம்மனுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, கலசங்களில், புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.மாலையில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் வெள்ளவேடு, திருமழிசை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.