பதிவு செய்த நாள்
21
டிச
2021
02:12
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது.விருதுநகர் ஸ்ரீ வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ நடராஜர் கோயில், ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயில்களில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது.
அருப்புக்கோட்டை: சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. கோ பூஜை,அபிஷேகம் நடந்தது. நடராஜர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். அருப்புக்கோட்டை அமுதலிங்க கேஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம் செய்யப்பட்டது.ராஜபாளையம்: மாயூரநாதசுவாமி கோயிலில் தொடர்ந்து 9 நாட்களாக திருவெம்பாவை பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை அன்னதானம் நடந்தது.அதிகாலை 3:00 மணிக்கு பல்வேறு வகையான அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், கோ பூஜை, தாண்டவ தீபாராதனை நடந்தது. பஞ்ச வாத்தியங்கள் முன்செல்ல பக்தர்கள் படை சூழ சிவனடியார்களுடன் உற்ஸவர் புறப்பாடு நடந்தது. பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம் வழங்கப்பட்டது. தக்கார் இளங்கோவன் செயல் அலுவலர் ஜவஹர் முன்னிலை வகித்தனர்.
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் சேரை அம்பலத்தில் வைத்து அபிஷேகம் நடந்தது. நடராஜர் சிவகாமி அம்பாள் புறப்பாடு நடந்தது. மாலையில் தவம் பெற்ற நாயகிக்கு தைல காப்பு அபிஷேகம் எதிர்சேவை தீபாராதனை நடந்தது.*தெற்கு வெங்காநல்லுார் சிதம்பரேஸ்வரர் கோயிலில் பிரகாரத்திலுள்ள நடராஜர் திருமேனிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது ஸ்ரீவில்லிபுத்துார்: மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கு சிறப்பு பூஜைகளை ரகு பட்டர், ரமேஷ் பட்டர், ஆனந்த விஜய் பட்டர் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜவஹர், கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். * வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவகாசி: சிவன் கோயில், முருகன் கோயில், கடைக் கோயிலில் திருவாதிரை திருவிழா கொண்டாடப்பட்டது. சிவன் கோயிலில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்திலே உலாவந்தனர்.