கம்பம் : கம்பம் ஆதிசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கம்பம் போர்டு ஸ்கூல் தெருவில், உள்ள ஆதிசக்தி விநாயகர், ஆனந்தீஸ்வரர் திரிபுரிசுந்தரி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் மற்றும் உடனுறை பரிவார தெய்வங்களுக்கும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் முடிவுற்று கடந்த 3 ந் தேதி முதல் யாகசால பூனஜகள் மற்றும் யாக வேள்விகள் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்பு வேள்விகளை தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலய கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. கூடியிருந்த பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.