பதிவு செய்த நாள்
23
டிச
2021
01:12
மணவாளக்குறிச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திற்கு பின் செய்த பரிகார பூஜைகள் அம்மனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது பற்றி தெ ரிந்து கொள்ள ஒழிவு பார்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி நடந்த தீ விபத்தில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து சேத மடைந்தது. இதையடுத்து பரிகார பூஜை செய்யும் பணிகளை கவனிக்க அனைத்து இந்து இயக்கங்களின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து தந்திரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிவுரைப்படி நேற்று கோயில் தந்திரி சங்கரநாராயண ஐயர் தலைமையில், கோயிலில் இதுவரை செய்த பரிகா ரங்கள் அம்மனால் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என ஒழிவு பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவனந்தபுரம் ஜோதிடர் கண்ணன் நாயர் ஒழிவு பார்க்கும்நிகழ்ச்சி நட த்தினார்.
கல்பக மங்கலத்தில் மணலிக்கரை மாத்தூர் மடம் சஜித்சங்கர நாராயணரூவை வைத்து இனி வரும் பரிகாரங்களை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒழிவு பார்க்கும் நிகழ்ச்சியில், அம்மனின் கோபம் தணியவில்லை. இப்போதும் கோயிலில் முறையாக பூஜைகள் நட க்கவில்லை. பணத்திற்காக எதுவும் செய்யும் நிலை உள்ளது. அம்மனுக்கு முன்பு இருக்கும் குருவிற்கு பூஜைகள் முறையாக செய்யவில்லை. பரிகாரங்களும் செய்யவில்லை. அம்மனுக்கு ஏற்பட்ட தீக்காயத்திற்கு மருந்திடாமல் வெளியில் பரிகாரங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதை அம்மன் ஏற்கவில்லை. ஆகவே அம்மன் மீது ஏற்பட்ட காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனத்தை அரைத்து பூச வேண்டும். கோயிலை விரிவாக்கம் செய்துதான் திருப்பணி துவங்க வேண்டும். கோயிலில் இருந்த உடைவாள் போன்ற பொருட்கள் திருட்டு போய் உள்ளது. அம்மன் புற்றில் நல்லபாம்பு குடிகொண்டு உள்ளது. இது வந்து செல்ல மேற்கு பகுதியில் தனிவழி உள்ளது. இது அம்மனின் ஆபரணமாக அலங்கரித்து வந்தது. இக்கோயிலில் காலாகாலமாக ஆசார அனுஷ்டானங்களுடன் நடந்து வந்த பூஜைகளை முறைப்படுத்த வேண்டும் என தெரியவந்தது. நிகழ்ச்சியில், கோயில் ஸ்ரீகாரியம் ஆறுமுகநைனார், இந்து முன்னணி கோட்டபொறுப்பாளர் மிசாசோமன், இந்து கோயில் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதிராஜ், ஹைந்தவ சேவா சங்க பொதுச் செயலாளர் ரத்தினபாண்டியன், செயலாளர் முருகன், தேவி சேவா சங்க பொதுச்செயலாளர் சிவகுமார், துணைத் தலைவர் சதீஷ்குமார், பி.எம்.எஸ்., மாநில பொறுப்பாளர் முருகேசன், பெரிய சக்கர தீவெட் டி கமிட்டித்தலைவர் முருகன் மற்றும் சாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.