அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், கிறிஸ்மஸ் விழா 25ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகை வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, அன்னூர் சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கிறிஸ்து நாதர் ஆலயம் வண்ணமயமாக ஜொலிக்கிறது. இங்கு 25ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடக்கிறது. இதையடுத்து கிலை 9:30 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. ஆயர் மாணிக்கம் ஏசுதாஸ் கிறிஸ்மஸ் செய்தி வழங்குகிறார். எல்லப்பாளையம் மற்றும் கெம்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில், 24ம் தேதி இரவு சிறப்பு வழிபாடும், 25ம் தேதி காலையிலும் கிறிஸ்துமஸ் ஆராதனையும் நடைபெறுகிறது. இரண்டு ஆலயங்களும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.