புதூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2021 01:12
புதூர் : மதுரை, புதூர் ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.
இக்கோயில் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலையில் ஐயப்பனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இன்று காலை லட்சார்ச்சனை நடந்தது. உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.