பதிவு செய்த நாள்
07
ஜூலை
2012
10:07
திருச்சி: திருச்சி அருகே ஆர்.வி.எஸ்., இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நாளை (8ம் தேதி) நடக்கிறது.திருச்சி-திண்டுக்கல் மெயின்ரோட்டில் ஆர்.வி.எஸ்., இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் ஸ்ரீ வித்யா கணபதி கோவில் கட்டப்பட்டது. கோவிலின் கும்பாபிஷேகம் நாளை (8ம் தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது.கும்பாபிஷேகத்தை பாலமுருகனடிமை ஸ்வாமிகள், சச்சிதானந்த ஸ்வாமிகள் முன்னின்று நடத்துகின்றனர். கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி இன்று மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, புனித நீர் வழிபாடு, விநாயகர் பாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. எட்டு மணிக்கு விநாயகர், சுப்ரமணியருக்கு எந்திர பிரதிஷ்டை எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.நாளை காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மூல மூர்த்திகளுக்கு ஆனந்தாட்டல், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிக்கு பின், காலை 10.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை ஆர்.வி.எஸ்., இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி குப்புசாமி, அவரது மனைவி பத்மாவதி மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.