க.பரமத்தி: சின்னதாராபுரம் பஞ்சாயத்து புளியம்பட்டி பகவதியம்மன் மற்றும் மந்தபிடாரி ஸ்வாமி கோவிலில் நாளை (8ம் தேதி) மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.பிரசித்தி பெற்ற கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. மாலை 5.30 மணிக்கு முதற்கால பூஜை மற்றும் இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு இரண்டாம்கால பூஜையும், 8.30 மணிக்கு கோடந்தூர் ஆதினம், திருஞான சம்பந்த சிவாச்சாரியார் தலைமையில் மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. மஹா தீபராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராமசாமி கவுண்டர், கொத்துக்காரர் பழனிசாமி கவுண்டர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.