செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் சிவ வாத்தியங்கள் முழுங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 8 மணிக்கு மகா தீபாரதனை செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. வழக்கம் போல் மூலவர் சாமி தரிசனம் நடந்தது.