வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு வால்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 10008 வடைகளால் செய்யப்பட்ட அலங்காரத்துடன் அனுமன் காட்சியளித்தார். சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடந்தன. பூசாரி கணேசன் அலங்காரம் பூஜை செய்தார்.
கெங்குவார்பட்டி: முக்கிய பிராண ஆஞ்சநேயர் கோயிலில் நிர்வாக பூஜையுடன் அனுமன் ஜெயந்தி பூஜைகள் துவங்கின. ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்த, இளநீர், சந்தனம் அபிஷேகம் நடந்தது. ஆஞ்சநெயர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். கோபிநாத் ஐயங்கார் சார்பில் சொற்பொழிவு நடந்தது.
அணைப்பட்டி: வீரஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு திருமஞ்சனம், சந்தனம், வெண்ணைக்காப்பு சாத்தப்பட்டது. 18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பரம்பரை அறங்காவலர் வெள்ளிமலை காமைய சுவாமி உள்ளிட்டோர் அபிஷேக, ஆராதனைகளில் பங்கேற்றனர். பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் விஜயராகவன் தலைமையில் குழுவினர் சிறப்பு அலங்கா,ர அபிஷேகங்கள் செய்திருந்தனர்.