திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை சிறப்பு திருமஞ்சனம், வெண்ணை காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை அர்ச்சனை, நாமசங்கீர்த்தனம் மகா தீபாராதனை நடந்தது.
இதேபோல் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, லட்ச தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் ஏற்பாடுகளை கோவில் ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.