பதிவு செய்த நாள்
04
ஜன
2022
11:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்தநாள் விழா குருபூஜை நடந்தது.
கோவிட் தொற்று காரணமாக இந்த ஆண்டு குரு பூஜை விழா, எளிமையான முறையில் நடந்தது. காலை வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர், வித்யாலயா கொடியினை ஏற்றி, குருபூஜை விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாலை சிறுவர்களின் பஜனை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. வித்யாலயா பாலிடெக்னிக் நிறுவனத்தின் செயலாளர் சுவாமி தட்பாஷானந்தர் சிறப்புரையாற்றினார். மேலும், வித்யாலயா இசை ஆசிரியர்கள் பங்கேற்ற இசை கச்சேரி நடந்தது. தொடர்ந்து, சுவாமி விவேகானந்தர் இளைஞர் அமைப்பினை சேர்ந்த இளைஞர்கள் வழங்கிய உத்தம்சிங் நாடக நிகழ்ச்சி நடந்தது. விழாவில், சுவாமிகள், பிரம்மச்சாரிகள், வித்யாலயா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என, 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையில், விவேகானந்தர் இளைஞர் அமைப்பினர் செய்திருந்தனர்.