அன்னூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அன்னூர் கரிவரதராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியே வந்து அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதேசி நாளான நேற்று அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை 3:30 மணிக்கு அபிஷேக பூஜை நடந்தது. 4:30 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதர கரிவரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும் ராமானுஜர் சன்னதிகளில் எதிர் சேவை ஆற்றினார். இதைத்தொடர்ந்து திருவெம்பாவையின் 29ம் நாள் பாடல் பாடப்பட்டது. காலை 5:45 மணிக்கு பெருமாள் சொர்க்கவாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்தில் உலா வந்து பெருமாள் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு விழாவில் பங்கேற்றனர்.