பரமக்குடி: பரமக்குடி கோயில்களில் தை பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது. பரமக்குடி சின்னக்கடை தெரு ஸ்ரீதுர்க்கை அம்மன் கோயிலில், தை முதல் வெள்ளி மற்றும் பொங்கல் விழாவையொட்டி, மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பரமக்குடி பெருமாள் சிவன் அனுமன் உள்ளிட்ட அனைத்து கோயில்களையும் தைப்பொங்கல் விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் வைகுண்ட ஏகாதசி மறு நாளான நேற்று துவாதசி விழாவையொட்டி பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து ராப்பத்து உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கோயில்களில் பக்தர்கள் இன்றி அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டன.