ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதிகளுடன் முதலுதவி மையம் தயார் நிலையில் உள்ளது. ராமேஸ்வரம், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட 10 முக்கிய கோயில்களில் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க முதலுதவி மையம் அமைக்க அரசு உத்தரவிட்டு, இதற்கான டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் தேர்வு செய்யும் பணியை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. தற்போது டாக்டர்கள், பணயாளர்கள் நியமனம் செய்த நிலையில், கடந்த இரு தினங்களாக ராமேஸ்வரம் கோயில் கிழக்கு ரத வீதியில் கோயிலுக்கு சொந்தமான கட்டடத்தில் 5 படுக்கை வசதியுடன் முதலுதவி மையம் தயார் நிலையில் உள்ளது. இன்னும் சில நாட்களில் மருந்து மற்றும் உபகரணங்கள் வந்ததும், மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.