மானாமதுரை: மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் அதிகாலை வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்த முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் காட்சியளித்தார். பக்தர்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று வழிவிடு முருகன் கோயில்,அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், இடைக்காட்டூர் பாலசுப்பிரமணியர் கோயில்,கால்பிரபு முருகன் கோயில்களிலும், இளையான்குடி பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.