குழந்தை வேலப்பர் கோயிலுக்கு வெளியே வழிபட்டு சென்ற பாதயாத்திரை பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2022 07:01
ஒட்டன்சத்திரம்: கொரோனோ தொற்று வேகமாக பரவி வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களுக்குள் சென்று வழிபட பொதுமக்களுக்கு அனுமதி இல்லாதால் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் முன்பு நின்று சூடம் கொளுத்தி வழிபட்டுச் சென்றனர்.
ஆண்டுதோறும் பழநியில் நடைபெறும் தைப்பூசத்திற்கு ஏராளமான பக்தர்கள் பல மாவட்டங்களிலிருந்து பாதையாத்திரை செல்வர். இந்த ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய தினங்களில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக மற்ற நாட்களிலாவது முருகனை வழிபடலாம் என்ற எண்ணத்தில் தைப்பூசம் முடிந்த பிறகும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது தொடர்கிறது. ஒட்டன்சத்திரம் அருகே குழந்தை வேலப்பர் கோயிலில், குழந்தை வடிவில் வீற்றிருக்கும் குழந்தை வேலப்பரை தரிசிக்காமல் செல்வதில்லை. இன்று சனிக்கிழமை என்பதால் அரசு உத்தரவுப்படி குழந்தை வேலப்பர் கோயிலில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் பாதயாத்திரை பக்தர்கள் கோயில் வெளியே சூடம் கொளுத்தி வழிபட்டுச் சென்றனர்.