கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் கொடை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2022 02:01
கடையம்: கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் கொடை விழா துவங்கியது. கடையம் வடக்கு ரத வீதியில் உள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் கொடைவிழா துவங்கியது. காலையில் அம்மனுக்கு பஜார் வியாபாரிகள் சார்பில் சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. முன்னதாக கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு முப்புடாதி அம்மன் கோயிலில் இருந்து பட்டு எடுத்துச்சென்று கீழக்கடையம் பத்திர காளியம்மனுக்கு சாற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து முப்புடாதி அம்மன் கோயிலில் கால்நாட்டுதல் வைபவம், அம்மன் சிறப்பு கோலத்தில் காட்சியளித்தல், தீபாராதனை, அம்மன் மாடவீதியில் எழுந்தருளல் நடந்தது. கொரோனா 3வது அலை காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் சமூக இடைவெளியுடன் கொடைவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.