பதிவு செய்த நாள்
27
ஜன
2022
02:01
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் புகழ்பெற்ற சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. கோவில் சன்னதியில் இருந்த பழைய கொடிமரம், கடந்தாண்டு ஜூலை 16ம் தேதி பாலாலயம் நடந்தது. பின்னர், நவம்பர், 11ம் தேதி 27 அடி உயர புதிய தேக்கு மரத்தில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய கொடிமரத்துக்கு காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக, நேற்று மாலை 4:30 மணியளவில், வாஸ்துசாந்தி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாகனம், முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு மேல், இரண்டாம் கால பூஜைகளுடன், கடம் புறப்பாடு, கொடிமரத்துக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாலா, ஊராட்சித் தலைவர் தியாகநீதிராஜன் உட்பட பக்தர்கள் ஏராமளமானோர் பங்கேற்றனர்.