திருச்செந்துார் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2022 02:01
திருச்செந்துார்: திருச்செந்துார் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த உப கோயிலான வெயிலுகந்த அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மற்றும் ஆவணி திரு விழா வெகு விமரிசையாக நடக்கிறது. இந்தாண்டு பிரசித்தி மாசி திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. கொடி மரத்தில் காலை 6.45 மணிக்கு தாளங்கள் முழங்க முத்துராமன் வல்லவராயர் கொடியேற்றினார். கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 7.30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஸ்தானிகர்கள் வல்லவராயர் குடும்பத்தினர் பின்னர். இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் பிரதிநிதி ஓய்வு கால்நடை டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோயில் கணியாளர்கள் பிச்சையா, மணியம் பாஸ்கர், நாகராஜன், துாத்துக்குடி மாவட்ட காங்., விவசாய பிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் கோயில் உட்பிரகாரத்தில் அம்மன் எழுந்தருளி உலா நடக்கிறது. விழாவின் 10 நாளான பிப்ரவரி 4ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.