மயிலாடுதுறை: சீர்காழி பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் தீமிதி திருவிழா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதுபோல் இந்த ஆண்டு கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி உற்சவ திருவிழா துவங்கியது. இவ்விழாவின் எட்டாம் நாளான நேற்று தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் திரளான பக்தர்கள் பங்கேற்று காலை முதலே பால்குடம், அலகு காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மாலை தீமிதி உற்சவம் நடந்து. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி, பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.