மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் தீப்பிடித்து 4 ஆண்டுகள் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2022 03:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் தீப்பிடித்து இன்றோடு(பிப்.,2) நான்காண்டுகள் நிறைவு பெறுகிறது. இரண்டு ஆண்டுகளில் கோயில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளதால் திருப்பூர் ஒப்பந்ததாரர் வேல்முருகனுக்கு கட்டுமான பணி ஒதுக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
இக்கோயிலில் கடந்த 2018 பிப்.,2ல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இம்மண்டபம் முற்றிலும் சிதைந்தது. இதை சீரமைக்க கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்காக ரூ.6.40 கோடியும், மண்டபத்தை வடிவமைக்க ரூ.11.70 கோடியும் ஒதுக்கப்பட்டது. கற்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே களரம்பள்ளி மலையடிவாரப்பகுதியான பட்டிணம் கிராம குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு கோயில் செங்குளம் பண்ணையில் வைக்கப்பட்டுள்ளன. தீப்பிடித்து 4 ஆண்டுகளான நிலையில் இதுவரை கட்டுமான பணி துவங்கவில்லை. இதனாலேயே இந்தாண்டு நடக்க வேண்டிய கும்பாபிேஷகம் 2 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வீரவசந்தராயர் மண்டப கட்டுமான பணிக்கு 3 முறை டெண்டர் விடப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே தொடர்ந்து விண்ணப்பித்ததால் அறநிலையத்துறை டெண்டரை ரத்து செய்தது. கடந்தாண்டு இறுதி டெண்டர் விட்டதில் திருப்பூர், திருப்பதி ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்த திருப்பூர் வேல்முருகனுக்கு பணி ஒதுக்க வாய்ப்புள்ளது.