Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: தை ராசி பலன் ரிஷபம் : மாசி மாத பலன் ரிஷபம் : மாசி மாத பலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
மேஷம்: மாசி மாத பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: மாசி மாத பலன்

பதிவு செய்த நாள்

13 பிப்
2022
09:02

அசுவினி: இந்த மாதம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நல்லது. பெண்களுக்கு மனக்குழப்பம் தீரும். தைரியமாக எதையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் நீங்கள் அமைதியாக இருந்தாலும் சண்டை, குழப்பம் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம், வாகனங்கள் வாங்கலாம். அரசியல்துறையினர் நல்ல பெயர் வாங்குவர். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும்.

மாணவர்கள் அக்கறையுடன் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவர். கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் கிடைக்கும்.   
சந்திராஷ்டமம்: பிப். 23
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 4

பரிகாரம் திங்களன்று அம்மனை வழிபட துன்பங்கள் விலகும்.

பரணி: இந்த மாதம் வீண்செலவு குறையும். சிலர் சேமிக்கவும் வாய்ப்பு உண்டாகும். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தொலைதுாரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.சாமர்த்தியமான பேச்சால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல் துறையினருக்கு அலைச்சல் இருக்கும். தொண்டர்கள்
மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.
சந்திராஷ்டமம்: பிப். 24
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 5

பரிகாரம்: ஞாயிறன்று  சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள்.

கார்த்திகை  1ம் பாதம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கும்; உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். இளைய சகோதரர் மூலம் எதிர்பார்த்த உதவி சரியான சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். பால்யகால நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். வீண் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலைதுாக்கி பின்னர் சரியாகும்.

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் நல்ல முடிவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை, நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். அரசியல் துறையினருக்கு நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். நண்பர்களுடன் பேசி மகிழ்வர்.
சந்திராஷ்டமம்: பிப். 25
அதிர்ஷ்ட நாள்:  மார்ச் 6

பரிகாரம்: தினமும் பெருமாளை வணங்க வாழ்வு வளம் பெறும்.

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar