கார்த்திகை 3, 4 பாதம்: நீண்ட கால பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலவும். நற்செயல்களில் ஈடுபட்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். கணவன், மனைவியிடையே அன்பு மேலோங்கும். பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருக்கும். எதிர்கால நலன் கருதி சேமிக்கவும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் ஒற்றுமை சிறக்கும். உடல் நலத்துடன் திகழும். அரசு தனியார் துறை பணியில் உள்ளவர்களும் வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவர். ஆடம்பர செலவினங்களை தவிர்த்து குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக செலவழிக்கும் வாய்ப்பு உருவாகும். தொழிலதிபர்கள் புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வர். தொழில் புரியும் பெண்கள் மேன்மை பெறுவார்கள். பணியாளர்கள் பணிரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கலைத்துறையினர் தங்களின் தொழிலில் அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும், புகழும் பெறுவார்கள். அரசியல்வாதிகள் நற்செயல்களில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து கல்வி வளர்ச்சி காண்பர். பெற்றோர்களின் தேவையறிந்து உதவுவர். வேலை தேடுவோருக்கு பணிவாய்ப்பு கிடைக்கும். சந்திராஷ்டமம்: பிப். 25 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 6 பரிகாரம் முருகனுக்கு தீபமேற்றி சன்னதியை வலம் வரவும்.
ரோகிணி: மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியமுடன் இருக்கும். வீண் கவலை மறையும். உறவினர் வருகையில் வீட்டில் கலகலப்பு உண்டாகும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். திட்டமிட்டபடி பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்ச்சி நடத்துவீர்கள். காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த இடையூறுகள் விலகும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று பின்பற்றுவது நன்மையளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி தொடர்பான அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு வீண் செலவு குறையும். நீண்ட துார பயணங்கள் செல்ல நேரிடலாம். சாதுர்யமான செயல்பாடுகளால் எடுத்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினர் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவர். அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சந்திராஷ்டமம்: பிப். 26 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 7 பரிகாரம் : ஸ்ரீ மகாலட்சுமி வழிபாட்டால் கடன் அகலும்.
மிருகசீரிடம் 1,2 பாதம்: நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். உடலில் சோர்வு தென்பட்டாலும் மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக்கட்டை நீங்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்து மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. வீடு, வாகன வகையில் மராமத்து செலவு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணியாளர்கள் எளிதான பணிகளைக் கூட கடினப்பட்டு செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். பெண்களுக்கு குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். கலைத்துறையினர் ஓய்வில்லாமல் உழைக்கும் சூழல் உருவாகும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வீண் பொழுது போக்குகளை தவிர்க்கவும். சந்திராஷ்டமம்: பிப். 27 அதிர்ஷ்ட நாள்: மார்ச் 8 பரிகாரம்: காளிக்கு அரளிப்பூ சாற்றி வழிபட தடைகள் விலகும்.
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »