சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோடி அர்ச்சனை நிறைவு தினத்தையொட்டி அதிருத்ர பாராயண பூர்த்தி நடந்தது. இதில் வெளி மாநிலத்தை சேர்ந்த 150 வேத விற்பன்னர்கள், 150 நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் பங்கேற்று நான்கு வேதங்களையும் பாராயணம் செய்தனர். 9 யாக குண்டங்களில் ேஹாமம் நடந்தது. 108 ஆச்சாரியார்கள் யாகத்தில் பங்கேற்று மந்திரம் ஓதினர். இதில் வெள்ளியில் 2 ஆயிரத்து 16 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.