பதிவு செய்த நாள்
21
பிப்
2022
12:02
கோவை: கம்பீர விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது; ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ், 1ல் கம்பீர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், லிங்கோத்பவர், பிரம்மா, ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புதிதாக சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஈச்சனாரி விநாயர் கோவில் குருக்கள் பூரண பிரகாசம் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். குறிச்சி ஹவுசிங் யூனிட், எம்.ஜி.ஆர்., நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர்.