பதிவு செய்த நாள்
22
பிப்
2022
10:02
ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா நடந்தது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில், 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதி யாகவும் விளங்கிறது. இத்திருத்தலத்தில் தான், சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்தார். மாசி மாதம் திருவிசாகத்தன்று, தாமிரபரணி பொருநல் சங்கணித் துறையிலிருந்து தீர்த்தம் எடுத்து காய்ச்சவும் என உத்தரவு, நம்மாழ்வாரிடமிருந்து பெற்று, மதுரக வி ஆழ்வாரால் கைபடாத உற்சவர் திருமேனி, நமக்கு வணங்ககிடைத்தது. இந்த நன்னாளைப்போற்றும் முறையிலேயே, ஆண்டுதோறும் மாசி தெப்பதிருவிழா 12 தினங்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 9 தினங்களாக, சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தார். 9ம் தினமான நேற்று முன்தினம் தேரில் வீதிஉலா வந்தார்.
10ம் திருளான தெப்பத்திருவிழா 2 தினங்களாக நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியதேவிகளுடன், சுவாமி பொலிந்து நின்றபிரான், தெப்பத்திற்கு எழுந்தருளினார். தெப்பத்திற்கு எழுந்தருளிய பெருமாள், தாயாருக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தெப்பம் மூன்று முறை வலம் வந்தது. திருக்கோயிலில், சுவாமி நம்மாழ்வார் மோகினி அலங்காரம் கண்டருளி, பத்தி உலா போல் ஆழ்வாரும், சுவாமியும் எதிரெதிரேவந்தனர். தொடர்ந்து சுவாமி பெருமாள்மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளினார். ஜீயர் மற்றும் ஆச்சாரியபுருஷர்கள், பிரபந்தபாடல்கள்பாடியபடி முன் செல்ல, நம்மாழ்வார் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வந்தார். இன்று ஆச்சாரியார்கள் தெப்போஸ்தவம் நடைபெறுகின்றது . இவ்விழாவில் ஜீயர் சுவாமி கள், ஆச்சார்யபுருஷர் கள், பக்தர்கள்கலந்து கொண்டனர். திருவிழா ஏற்பாடுகளைநிர்வாக அதிகாரி அஜீத் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.