கோபால்பட்டி அருகே 1008 சிவ லிங்கங்களுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2022 12:02
சாணார்பட்டி: கோபால்பட்டி அருகே 1008 சிவலிங்கங்கள் கொண்ட ஆத்ம லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
கோபால்பட்டி அருகே சிலுவத்தூர் ஊராட்சி காம்பார்பட்டி கிராமத்தில் மாதா புவனேஸ்வரி அம்மன் உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்க கோவில் உள்ளது. இந்தக் கோவில் திண்டுக்கல் மாவட்டத்திலேயே ஒரே கூரையின் கீழ் 1008 சிவலிங்கங்கள் கொண்ட சிறப்பு பெற்ற சிவாலயம் ஆகும். இந்தக் கோயிலில் பக்தர்கள் தானமாக கொடுத்த 1008 சிவ சிவலிங்கம் மற்றும் 80 டன் இடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 20 அடி நீள பள்ளிகொண்ட பெருமாள், பெருமாளின் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், நரசிம்ம அவதாரம் உள்ளிட்ட ஒன்பது அவதார சிலைகளுக்கும் வரும் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பிப் 28, மகா கணபதி ஹோமம், மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது.