பதிவு செய்த நாள்
07
மார்
2022
03:03
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், பகவான் ராமகிருஷ்ணரின், 187ம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மங்கள ஆரத்தியுடன் விழா துவங்கியது. வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் விழாவை துவக்கி வைத்தார். மாணவர்கள் வேதபாராயணம், பஜனை நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து, வித்யாலயாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, மகா ஹோமம் ராமகிருஷ்ணர் கோவிலில் நடந்தது. இதில், 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாலையில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. இதில், வித்யாலயா நிறுவனங்களில் பணியாற்றும் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். பல்லக்கு ஊர்வலம் பள்ளி, கல்லூரிகள், அலுவலர் குடியிருப்புகள் வழியாக சென்று, கோவிலில் நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில், சுவாமிகள், பிரம்மச்சாரிகள், பல்வேறு நிறுவனங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பக்தர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.