புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக் கொள்ளை உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 45ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் வல்லாளன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு தேர் உற்சவம், மாலை 6:00 மணிக்கு நரிமேடு மயானத்தில் மயானக் கொள்ளை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 10ம் தேதி வேதபுரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி, 16ம் தேதி தெப்பல் உற்சவம், 18ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 19ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.வம்பா கீரப்பாளையம்வம்பா கீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.வம்பா கீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் 26ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.மதியம் 2:30 மணிக்கு, சன்னியாசிதோப்பில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, மயமான கொள்ளை விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.இன்று அம்மனுக்கு தெப்பல் உற்சவம், நாளை மஞ்சள் நீர் மற்றும் விடையாற்றி உற்சவம் நடக்கிறது.