Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... ஒன்பது மாதங்களில் ரூ.2,400 கோடி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 மார்
2022
06:03

மானாமதுரை: மானாமதுரையில் எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி- சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கு முன்பாக எல்லை தெய்வமான எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு சித்திரை திருவிழா நடை பெறுவதற்கு அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து எல்லைப்பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவர் எல்லைப்பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் சர்வ அலங்காரங்களுடன் கோயிலுக்கு முன் எழுந்தருளினார்.இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் மற்றும் மாவிளக்கு பூஜை விழா வருகிற 29ம் தேதி நடைபெற உள்ளது.விழா நாட்களில் போது தினந்தோறும் உற்சவர் எல்லைப்பிடாரி அம்மன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலிலிருந்து எல்லைப்பிடாரியம்மன் கோவில் வரை வீதி உலா நடைபெறும்.இந்த விழா முடிவடைந்தவுடன் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா துவங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar