கண்ணகி கோயில் விழா : சுமூகமாக நடந்த ஏற்பாடு செய்யப்படும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2022 04:03
உத்தமபாளையம்: கண்ணகி கோயில் திருவிழா இந்தாண்டு சுமூகமாக நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உத்தமபாளையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆர்.டி.ஒ. கவுசல்யா, ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தெரிவித்னர்.
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கற்புடை தெய்வம் கண்ணகி கோயில் திருவிழா இந்தாண்டு வரும் ஏப்ரல் 16 ல் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் நடைபெற்றது. ஆர்.டி.ஒ கவுசல்யா, ஏ.எஸ்.பி. ஸ்ரேயாகுப்தா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வனத்துறை, வருவாய், போலீஸ், சுகாதாரம், தீயணைப்பு உள்ளிட்ட பல துறையினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற கண்ணகி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், ‘கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. கேரள அதிகாரிகள் பல இடையூறுகள் செய்வார்கள்.எனவே இந்தாண்டு திருவிழா நடைபெற இடையூறு செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர். பதிலளித்த அதிகாரிகள் ‘ வரும் மார்ச் 30 ல் இரு மாநில அதிகாரிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பேசி தமிழக பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்‘ என்றனர்.