ஏர்வாடி: கோதைசேரி சந்தன மாரியம்மன் கோயிலில் வரும் 24ம் தேதி கொடை விழா நடக்கிறது. கோதைசேரி சந்தன மாரியம்மன் கோயில் ஆடி கொடைவிழா வரும் 23ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. முதல்நாள் நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு திருமலைநம்பி கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை பூஜை நடக்கிறது. இரவில் மேளம், மகுடம், வில்லிசை கச்சேரி நடக்கிறது. வரும் 24ம்தேதி காலை 9 மணிக்கு விநாயகர் கோயிலில் இருந்து பால்குட பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு அம்மனுக்கு ஆராதனை சிறப்பு பூஜை நடக்கிறது. மதியம் அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்பாளுக்கு பூமாலை சூட்டி தெருபவனி வந்து அலங்கார தீபாராதனை பூஜை நடக்கிறது. தொடர்ந்து பூக்கொடை வரத்து வில்லிசை கலை நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும் நடக்கிறது.வரும் 25ம்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் கும்பபம் எடுத்து தெருபவனி வந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோதைசேரி யாதவ சமுதாயத்தினர் செய்துவருகின்றனர்.