கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் பழமை வாய்ந்த பொன்னும் சிறையெடுத்த அய்யனார் கோயில் உள்ளது.
இங்கு புதியதாக திருப்பணி செய்யப்பட்டு கடந்த பிப்., 6 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு மண்டல பூஜை விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மூலவர்கள் பூரண, புஷ்கலா தேவி சமேத பொன்னும் சிறையெடுத்து அய்யனார், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலையில் 305 விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி எஸ்.கிழவன், தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் தர்மராஜ், பொருளாளர் அருள்ராஜ், சதீஸ்குமார், பால்சாமி, திருச்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.