ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் இரு ஆண்டுக்குப் பின் தேரோட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் 10 நாட்கள் விழா நடைபெறும். கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரு ஆண்டுகளாக இக்கோயிலில் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 8ல் கொடியேற்றத்துடன் விழாவை துவக்கி ஏப்ரல் 14ல் சுவாமி திருக்கல்யாணம், ஏப்ரல் 17, 18ல் தேரோட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.