பாலமேடு: பாலமேடு அருகே டி.மேட்டுப்பட்டியில் மருதுபாண்டியர் மற்றும் அகமுடையார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சிமாகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவ விழா மார்ச் 28ல் துவங்கியது. சுமங்கலி பூஜையை தொடர்ந்து, உலக மக்கள் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காப்புகட்டி விரதம் இருந்த பக்தர்கள் இன்று(மார்ச் 30) பொங்கல் வைத்தும், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.