சோழவந்தான்: சோழவந்தான் வேளார் தெரு உளுந்துரர் காளியம்மன் கோயில் பங்குனி உற்சவ திருவிழா நேற்று (மார்ச் 29) கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏப்., 7 வரை நடக்கும் விழாவில் அம்மனுக்கு தினமும் மாலை சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனைகள் நடக்கும். ஏப்.,3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் முறையே விளக்கு பூஜை, பூச்சொரிதல், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.