பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
07:04
காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில், ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இரண்டு நாளில் பூஜை பொருள் மாறி விட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவுப் பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சுப்பிரமணியசுவாமி உத்தரவிடும் பொருள், இப்பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது. இந்த பொருளுக்கு கால நிர்ணயம் ஏதுமில்லை. அடுத்த பொருள் வரும் வரை வைக்கப்பட்டிருக்கும். பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் உத்தரவு பொருளானது, சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.இந்நிலையில் கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த காமராஜ், 55, என்ற பக்தரின் கனவில் உத்தரவான, மூன்று கிலோ விபூதி, ஏழு எலுமிச்சம் பழம் நேற்று முதல் இடம் பெற்றுள்ளது. கடந்த, 1ம் தேதி தான், போகர் சித்தர் திருவுருவப்படம் பெட்டியில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாளில், பூஜை பொருள் மாறியிருப்பது ஆச்சர்யம் தருவதாக, கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.