பழநியில் தீர்த்த காவடியுடன் குவிந்த பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2022 08:04
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்ற நிலையில் தீர்த்த காவடி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த மலைக்கோயில் வந்ததால் கூட்ட நெரிசல் அதிகரித்தது.
பழநியில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து பழநி மலைக்கோயிலில் செலுத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக கொடுமுடி தீர்த்தக்காவடி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஜவகர் வீதி, அருள்ஜோதி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குளத்துரோடு, ஜவகர் வீதி, அருள்ஜோதி வீதி பகுதிகளில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.